‘ சுய் தாகா” படத்தில் முதன் முதலாக ஜோடி சேரும் வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா

வருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும்  படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர்  சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் வருண் தவான் மௌஜி என்ற கதாபாத்திர பெயரிலும் , அனுஷ்கா ஷர்மா மம்தா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் சிறிய கிராமங்களில் நடைபெற்றது.அங்கு அவர்கள் தங்குவதற்கு பெரிய அளவிலான ஹோட்டல்கள் கிடையாது.எனவே கிடைத்த சிறிய அளவிலான விருந்தினர்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.
“இந்த படத்தை உருவாக்குவதற்கு மிக அருமையான இடங்களை தேர்வு செய்தனர்.இந்த படத்தின் ட்ரைலர் மக்களுக்கு மிகவும் பிடித்தபடியும் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.இதற்க்கு முக்கிய காரணம் சரத் கட்டார்யா மற்றும் மணீஷ் ஷர்மா ஆகியோர் தான் .இந்த மாதிரியான சிறிய நகரப்பகுதிகளில் படப்பிடிப்பில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது ” என அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.
“சிறிய விருந்தினர்கள் தாங்கும் வீடுகளில் வாழ்த்து வந்தது மிகவும் பிடித்தது.அங்குள்ள மக்களும் அவர்களது ஆதரவையும் அன்பரும் எங்களுக்கு அளித்தனர்.இந்த நிகழ்வுகள் எனக்கு மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும் ” என நடிகர் வருண் தெரிவித்துள்ளார்.
‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *