பேட்ட படத்திற்கு சென்சாரில் யு/ஏ சர்டிபிகேட்.; பொங்கலுக்கு பராக்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘பேட்ட’.
இதில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, நவாஸுதின் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தமிழக விநியோக ஏரியாக்களின் உரிமையை வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில், சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்துள்ளனர்.
படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது..
இதனைத் தொடர்ந்து ‘பேட்ட பொங்கல் பராக்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பேட்ட பட  ட்ரெய்லரை 2019 புத்தாண்டுக்கு அன்று வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

16 + seventeen =