மனைவி சொல்லே மந்திரம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

திருமண வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க வேண்டுமானால் மனைவியின் பேச்சைத் தட்டாமல் கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

மனைவியிடமிருந்து விவகாரத்துக் கோரி டெல்லியைச் சேர்ந்த விமானப் படை அதிகாரி தீபக்குமார் தாக்கல் செய்த வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, தீபக் வர்மா ஆகியோர் திருமண வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால் மனைவி சொல்வதைக் கேட்க வேண்டுமென யோசனைத் தெரிவித்தனர்.

மேலும், மனைவி எதுக் கூறினாலும் அது நியாயமானதா அல்லது முட்டாள்தனமானதா என்று ஆராயாமல் அப்படியேக் கேட்டுக் கொண்டால் பிரச்சனையற்ற வாழ்க்கை நிச்சயம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு மனைவியின் பேச்சைக் கேட்காவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் பொதுவாக கணவன்மார்கள் பாதிக்கப்பட்டவர்களே என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கள்ளக் காதலுக்காக இரண்டு குழந்தைகளை இரக்கமின்றி கொன்ற அபிராமியின் செய்தி திடுக்கிட வைத்திருக்கும் நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
கணவன், மனைவிக்கு நடுவின் பிள்ளைகளின் வாழ்க்கையும் என்னாகுமோ?

 

Leave a Reply

Your email address will not be published.

15 − 7 =