ப்ரைம் மினிஸ்டர் மோகன்லாலின் பாதுகாவலர் ஆனார் சூர்யா

சூர்யா நடிப்பில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக செல்வராகவன் இயக்கியுள்ள படம் என்ஜிகே. (நந்த கோபால குமரன்).

இப்படத்தை முடித்துவிட்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதில் மோகன்லால், சாயிஷா, ஆர்யா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங்கை கே.வி.ஆனந்த் ரகசியமாக நடத்தி வந்த போதிலும் படத்தில் சூர்யாவின் கெட்டப் போட்டோ லீக்கானது.

அவர் கமாண்டோவாக நடிப்பதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் அவரது பாதுகாவலராக சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.

nine − 6 =