மீண்டும் சூர்யாவை இயக்கும் செல்வராகவன்.; எப்போது..??

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘NGK’ (நந்த கோபாலன் குமரன்).
இந்த படத்தில் சூர்யாவுன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் செல்வராகவன் இன்று காலை சூர்யா குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதில் சூர்யாவின் நடிப்பை புகழ்ந்து, மீண்டும் சூர்யாவுடன் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பமும் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.
இதற்கு சூர்யா, ஓகே சொல்வாரா..?? என்பதை பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *