மயில்சாமியால் சிரிப்பை அடக்க முடியல…; சிம்புக்கு நன்றி..: சூர்யா

தனஞ்செயன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கியுள்ள திரைப்படம் காற்றின் மொழி படம் நேற்று திரைக்கு வந்தது.

இதில் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா மெயின் கேரக்டரில் நடித்திருந்தார்.

அவரின் கணவராக விதார்த் நடித்திருந்தார்.

மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி, லட்சுமி மஞ்சு ஆகியோருடன் சிம்புவும், யோகிபாபுவும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர்.

இப்படத்தை பார்த்த சூர்யா படக்குழுவை பாராட்டி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

அதில், சிம்பு, லட்சுமி மஞ்சு, யோகிபாபுவிற்கு நன்றி கூறியுள்ள சூர்யா, மயில்சாமி நடித்த காட்சிகளின்போது என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ஜோதிகாவின் சினிமா கேரியரில் இது பெஸ்ட் படம்.

இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Suriya Sivakumar‏Verified account @Suriya_offl

Thank you #Simbu & @LakshmiManchu for making it even more special and Mylsamy sir I rolled down laughing.. Sure our audience and the raving reviews will give #KaatriMozli it’s deserving success #JoCareerBest

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *