HD பிரிண்டில் வெளியிடுவோம்..; சர்காருக்கு தமிழ் ராக்கர்ஸ் சவால்
நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள சர்கார், ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி மற்றும் விமல் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை ஆகிய 3 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இதில் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படத்தின் டிக்கெட் விலையோ ரூ. 800 வரை விற்கப்பட்டு வருகிறது. ஒரு புறம் இதற்கு எதிர்ப்பு இருந்தாலும், விஜய் ரசிகர்களோ ஆவலுடன் ப்ளாக்கில் வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் திருட்டுத்தனமாக படங்களை ஆன்லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் தளம் சர்கார் படத்திற்கு எதிராக சவால் விடுத்துள்ளனர்.
சர்கார் படத்தை HD பிரிண்டில் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளனர்.