சர்காரை எதிர்க்கும் தமிழக சர்கார்.; விஜய்க்கு ஆதரவாக கமல்-ரஜினி

கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினம் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு  ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானது.

இப்படம் வருவதற்கு முன்பே வருண் என்பவரின் கதையை திருடி தான் முருகதாஸ் படம் எடுத்தார் என கூறப்பட்டு அது கோர்ட் வழக்கு வரை சென்றது.

அதன்பின்னர் வருண் என்பவருடன் முருகதாஸ் சமரசம் செய்துக் கொண்டு டைட்டில் கார்ட்டில் அவரது பெயரை இடம் பெற செய்தார்.

தற்போது படம் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் படத்தை பார்த்த அதிமுகவினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆளும் அதிமுக அரசை கண்டிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளதாலும் வரலட்சுமியின் வில்லி கேரக்டருக்கு கோமளவள்ளி என்ற ஜெயலலிதா இயற்பெயரை வைத்துவிட்டதாலும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

தமிழக அமைச்சர்களே விஜய்யை நேரிடையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட சர்கார் திரையிடப்படும் தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன.

எனவே வேறுவழியின்றி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக் கொண்டது.

இதன் பின்னர் “சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை தடுக்க நினைப்பது சரியல்ல என சர்கார் படக்குழுவுக்கு தன் ஆதரவை தெரிவித்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் நடிகர் ரஜினியும் சர்கார் படத்திற்கு ஆதரவாக தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

இருவரும் தமிழில் பதிவிட்டுள்ளதால் அதை இங்கே பதிவிடுகிறோம்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.

Rajinikanth‏Verified account @rajinikanth 4m4 minutes ago

தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *