திருட்டு பூட்டுக்கு காவல் ஏன்?; போலீசிடம் வாக்குவாதம் செய்த விஷால் கைது
கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது எதிர் அணியினர் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
அவர் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து அண்ணா சலையில் உள்ள சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஜே.கே. ரித்தீஷ், தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி, ராதாகிருஷ்ணன், எஸ்வி. சேகர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் இந்த எதிர் அணியினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து பேசினர்.
இந்த தொடர் பிரச்சினைகளால் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையில் இன்று காலை 11 மணியளவில் நடிகர் விஷால் சங்கத்திற்கு வந்துள்ளர்.
இந்த சங்கத்தின் தலைவர் நான். என் அலுவலகத்திற்கு யாரோ பூட்டு போட, அதற்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு என அங்கிருந்தபோலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளர் விஷால்.
மேலும் அந்த பூட்டை உடைக்க விஷால் முயற்சித்துள்ளார்.
பதிவாளரிடம் வழங்கப்பட்ட சாவியை பெற்று வந்து சங்கத்தை திறக்க விஷாலை போலீசார் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் பூட்டை உடைத்தே தீருவேன் என விஷால் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
எனவே வேறு வழியின்றி நடிகர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் நடிகர் மன்சூர் அலிகானும் கைதுசெய்யப்பட்டார்.
தற்போது விஷால் ஆதரவாளர்கள் அனைவரும் தி.நகர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.