ஐரா விருதுடன் தளபதி படம்.; கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன் 100வது படைப்பாக மெர்சல் படத்தை தயாரித்தது.
விஜய் 3 வேடங்களில் நடித்த இப்படத்தை அட்லி இயக்கியிருந்தார்
விஜய் ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு மெர்சல் திரைப்படத்திற்காக விஜய்யை சிறந்த நடிகராகத் தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து லண்டனில் நடந்த விருது விழாவில் நடிகர் விஜய் தனது விருதை பெற்றுக் கொண்டார்.
அந்த போட்டோ வைரலாக அதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

