175 அடி விஜய் கட்அவுட்டை இரண்டே நாட்களில் அகற்றிய ரசிகர்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை தீபாவளியை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை முருகதாஸ் இயக்க ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் சுந்தர் ராமசாமி என்ற கேரக்டரில் விஜய் நடித்துள்ளார்.

அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழகத்தை விட கேரளாவில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கேரளாவில் கொல்லம் நண்பன்ஸ் என்ற விஜய் ரசிகர் மன்றம் சார்பில் இந்திய நடிகர்களிலேயே மிகப்பெரிய கட் அவுட்டை அதாவது 175 அடி உயரத்தில் வைத்திருந்தனர்.

இந்த கட் அவுட் திறப்பு விழாவை திருவிழா போன்றும் நடத்தியிருந்தனர். இதில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த வீடியோ பதிவுகளை சமூகவலைதளங்களிலும் வெளியிட்டிருந்தனர்.

தற்போது அந்த இடத்திலிருந்து அந்த கட் அவுட்டை அகற்றியுள்ளனர்.

வானிலை காரணங்களுக்காகவும் பாதுகாப்பு காரணங்களாலும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கட் அவுட் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *