சாதி, மத பேதங்கள், அரசியல் வேறுபாடுகள் நீங்கி அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வு பொங்கலைப் போல பொங்கி வரட்டும் – அபுபெக்கர்

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விழா. இந்த நன்னாள் முதல் சாதி, மத பேதங்கள், அரசியல் வேறுபாடுகள் நீங்கி அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வு பொங்கலைப் போல பொங்கி வரட்டும். தமிழர்களின் வலிமை, மேன்மை பாரெங்கும் பரவட்டும். அழிந்து வரும் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பதற்கு கரம் கோர்ப்போம். விவசாயம் செழிக்க நேசம் என்னும் உரம் சேர்ப்போம். போகி பண்டிகையின்போது தேவையில்லாத பிளாஸ்டிக், பாலித்தீன் உள்ளிட்ட பொருட்களை எரிக்க மாட்டோம் என உறுதியேற்போம்.

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்களால் இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் விழாவாகும்.

இத்தருணத்தில் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் எனது மகிழ்ச்சியான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருட பொங்கல் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..

இவ்வாறு அபுபெக்கர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *