ராஜ வம்சம் படத்தின் வெளியீட்டு தேதி உறுதியானது

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம்” அக்டோபர் 14 ஆம் தேதி – ஆயுத பூஜை முதல் திரையரங்குகளில் வெளியீடு !  

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள  ” ராஜ வம்சம் ” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் /நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை . நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் C . அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு.

இந்த படத்தில் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ், மனோபாலா ரமேஷ் கண்ணா , சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி , சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49  கலைஞர்கள்  நடித்துள்ளனர் .

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ்  இசை அமைத்துள்ளார். கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். நிர்வாக தயாரிப்பு N .சிவகுமார், தயாரிப்பு மேற்பார்வை பாண்டியன் பரமசிவம்.

செந்தூர் பிலிம்ஸ் சார்பில் TD ராஜா  தயாரித்துள்ள ராஜ வம்சம் அக்டோபர் 14 ஆம் தேதி – ஆயுத பூஜை முதல் திரையரங்குகளில்  வெளியாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =