யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் “ தர்மபிரபு “திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

நடிகர் யோகிபாபு “ தர்மபிரபு “ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட 2 கோடி செலவிலான செட்டில் படமாக்கப்படவுள்ளது. வெற்றி வெற்றி அமோக வெற்றி. நம்ம பிளஸ் ஒன்- அமோக வெற்றி என்ற வசனத்தை முதல் ஷாட்டில் யோகிபாபு பேச படப்பிடிப்பு துவங்கியது.

இப்படத்தின் கதை எமலோகத்தை மையமாக கொண்டது. யோகிபாபு இப்படத்தில் எமனின் மகனாக நடிக்கிறார். நடிகர் ராதாரவி அவருடைய தந்தையாக எமன் வேடத்தில் நடிக்கிறார்.

முத்துக்குமரன் இப்படத்தை இயக்குகிறார். P. வாரி பிலிம்ஸ் சார்பில் P. ரங்கநாதன் இப்படத்தை தயாரிக்கிறார். இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி , படத்தொகுப்பு சான் லோகேஷ் , கலை பாலசந்திரன் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *