காசுக்கு ஆசைப்படும் அசுரர்களின் கதை “காசுரன்”
கதையின் நாயகன் சிவா ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். ஜெஸ்ஸியின் தந்தை லாரண்ஸிற்கு சிவாவை பிடிக்காமல் போக, ஜெஸ்ஸிக்கு தெரியாமல் அவனை தன் செல்வாக்கு கொண்டு சிறையில் அடைக்கிறார். சிவா மனமுடைகிறான். ஜெஸ்ஸி தன் அப்பாவை வெறுக்க ஆரம்பிக்கிறாள். பல வருடங்கள் கழித்து ஜெயிலிருந்து வெளிய வந்த சிவா, உமர் என்ற ரௌடியை துணையாக கொண்டு லாரண்ஸ் மூலமாக பணம் அடையநினைக்கிறான். இதில் சிவா செய்த திட்டம் என்ன. உமர் சிவாவிடம் இருந்து அந்த பணத்தை எடுக்க என்ன திட்டம் தீட்டினான். ஜெஸ்ஸி இந்த திட்டத்தில் எப்படி மாட்டிக் கொண்டாள். சிவா செய்த திட்டம் எத்தனை பேரை பாதித்தது என்பது கதை. பணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று சொல்லுவதுதான் இந்த காசுரன். காசுக்கு ஆசைப்படும் அசுரர்களை பற்றியது. சிவாவாக ஸ்ரீ, ஜெஸ்ஸியாக அங்கனா ஆர்யா. உமராக ஸ்ரீநிவாசன். லாரண்ஸhக அவினாஷ், மாயாவாக கவிதா ராதேஷியாம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
தயாாிப்பு டமால் டுமீல் படத்தை இயக்கிய ஸ்ரீ மற்றும் எஸ்.ஆர்.ஜெ. இது நண்பர்கள் 30 பேர் ஒண்றக சேர்ந்து அவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்த படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது.
இயக்கம் – ஜத்தா மோகன் (அறிமுகம்)
ஓளிப்பதிவு – பராந்தகன் இ (அறிமுகம்)
இசை – பிரணவ் கிரிதரன் (அறிமுகம்)
படத்தொகுப்பு – புவனேஷ் மணிவண்ணன் (அறிமுகம்)
பாடல்கள் – ஜெ மற்றும் மனோஜ்;பிரபாகர்.எம் (அறிமுகம்)
ஆக்ஷன் – ஜி நடனம் – லலிதா ஷோபி
கலை – எஸ்.எஸ்.சுசீ தேவராஜ்;
பி.ஆர்.ஓ – நிகில்