திமிரு புடிச்சவன் விலகினாலும் சர்காருடன் மோதும் ரெண்டு படங்கள்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை.
நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படம் அன்று ரிலீஸாகிறது.
அதே நாளில் விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன், விமல் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை மற்றும் பில்லா பாண்டி ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன.
தற்போது விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன் படம் வேறொரு தேதிக்கு தள்ளிப் போகிறது.
அது நவம்பர் 16ம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.
எனவே அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.