திரு இயக்கத்தில் ஆவணப்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
கார்த்திக், கௌதம் நடிப்பில் அண்மையில் வெளியான மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தை இயக்கியவர் திரு.
தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
ஆனால் இது ஒரு பள்ளி மாணவர்களுக்கான ஆவணப்படமாக உருவாகி வருகிறதாம்.
இது ஒரு நல்ல நோக்கத்துக்காக உருவாகுவதாகவும் விரைவில் மற்ற விவரங்களை வெளியிடுவோம் என டைரக்டர் திரு தெரிவித்துள்ளார்.
இவர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.