அர்த்தமுள்ள ஆக்சன் ஸ்டோரி… துப்பாக்கி முனை விமர்சனம்

நடிகர்கள்: விக்ரம் பிரபு, ஹன்சிகா, மாரிமுத்து மற்றும் பலர்
இயக்கம் – தினேஷ் செல்வராஜ்
இசை – எல்வி. முத்துகணேஷ்
ஒளிப்பதிவு – ராசாமதி
தயாரிப்பாளர் – கலைப்புலி எஸ் தானு

கதை எப்படி..?

என்கவுண்டர் போலீஸ் ஆபிசர் பிர்லா போஸ். அவர்தான் விக்ரம் பிரபு.

கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட ரவுடிகளை சுட்டுத் தள்ளுகிறார். இதனால் அடிக்கடி டிரான்ஸ்பரும் கிடைக்கிறது.

மகனின் வாழ்க்கையே கொலை போன்ற களமாக மாறிவிட்டதால் அம்மா இவரை பிரிந்து செல்கிறார். காதலி ஹன்சிகாவும் ஒரு சூழ்நிலையில் இவரை வெறுக்கிறார்.

ஒரு கட்டத்தில் பாலியல் குற்றத்திற்காக ஆசாத் என்பவனை என்கௌண்டர் செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர்.

அப்போதுதான் அந்த வட இந்திய நபர் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.

எனவே அவரை காப்பாற்ற போராடுகிறார் விக்ரம் பிரபு.

சட்டத்தின் முன்பு அவரை குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபித்தார்? உயர் அதிகாரிகள் விக்ரம் பிரபுவை என்ன செய்தார்கள்?என்பதே மீதிக்கதை.

நடித்தவர்கள் எப்படி..?

போலீஸ்க்கு உரிய கம்பீரமாக நிற்கிறார் விக்ரம் பிரபு. சீரியசான என்கௌண்டன்ராக வாழுகிறார். ஆனால் காதலியுடன் இருக்கும் போது ஒரு துளி சொட்டு அளவு கூட சிரிப்பு இல்லை.

அதுபோல் ஹன்சிகாவுக்கு படத்தில் வேலையே இல்லை. ஹீரோவுக்கு உதவினாலும் அதிலும் பெரிய சுவாரஸ்யம் இல்லை.

படத்தின் ஆணி வேர் கேரக்டர் எம்எஸ்பாஸ்கரும் அவரது மகளும்தான்.

துப்பாக்கி முனையை இவர்கள் தான் சார்ப் ஆகியிருக்கிறார்கள்.

இருவரும் நல்ல தேர்வு. அதிலும் க்ளைமாக்ஸில் எம்எஸ். பாஸ்கர் பேசும் வசனங்கள் எதிர்பாராத திருப்பம்.

குற்றவாளிகள் திருந்தினால் மட்டும்தான் திருட்டை ஒழிக்க முடியும் என்பது போல, பாலியல் குற்றங்களை தடுக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை அருமையாக வலியுறுத்தியுள்ளார்.

கைதியாக வரும் அந்த நபர் ஆசாத் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.

விக்ரம் பிரபு உடன் வரும் 2 போலீஸ்காரர்களும் வில்லன் கேரக்டர்களில் வென்றவர்கள் என்பதால் இதிலும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளன்ர.

மிரட்டல் வில்லனாக வேல ராமூர்த்தி. பார்வையிலேயே கெத்து காட்டியிருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் பணி எப்படி..?

பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார் முத்துகணேஷ். அதுபோல் எம்எஸ் பாஸ்கரின் மகள் பாடல் நன்றாக உள்ளது.

ராசாமதியின் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் காட்சிகளும் அந்த பங்களா காட்சிகளும் நன்றாக உள்ளது.

ஆக்சன் கதையை அர்த்தமுள்ள கதையாக கொடுத்துள்ளார் தினேஷ் செல்வராஜ்.

மொத்தத்தில் துப்பாக்கி முனை… அர்த்தமுள்ள ஆக்சன் ஸ்டோரி.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

18 − seventeen =