விஜய்க்கு இது நல்லதல்ல.; சர்கார் மீது கடுப்பில் கடம்பூர் ராஜூ

 தீபாவளி பண்டிகை தினத்தன்று சர்கார் திரைப்படம் உலகமெங்கும் வெளியானது.

முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது.

இப்படம் அரசியல் படம் என்பதால் அரசியல் கட்சிகளின் நிறைய நிகழ்வுகளை கடுமையாக சாடியிருந்தனர்.

முக்கியமாக ஒரு காட்சியில் அரசு கொடுத்த இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்துவார்கள். அரசு மீது கோபத்தில் இருக்கும் மக்கள் இதை செய்வார்கள்.

எனவே இப்படத்திற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல

சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்

சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும்.  இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி தன் எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

14 + 4 =