இன்றைய தலைப்பு செய்திகள்
ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் :
செப். 18ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்
நாட்டை காவிமயமாக்கும் பாஜக கனவுகளைத் தர்ப்போம்
செப். 10ல் நடைபெறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிர்ப்பு பந்த்துக்கு ஆதரவு – திமுக தீர்மானம்
கடைமடைக்கு காவிரி செல்லாமல் வீணாவைத் தடுக்க வேண்டும் – திமுக தீர்மானம்
அதிமுக ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் – திமுக தீர்மானம்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்- திமுக தீர்மானம்
குட்கா ஊழலில் சிக்கிய விஜயபாஸ்கர், டிஜிபியை நீக்க வேண்டும் -திமுக
6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழித்திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அதற்கான பணிகள் அடுத்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும்.
அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.
ஆசிரியைகள் 9 மாதம் பிரசவ விடுப்பில் செல்லும்போது அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தடையில்லா கல்வி வழங்கப்படும்.
ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்பட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம். அல்லது 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் புகார் கொடுக்கலாம்.
புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல்கள் பாதுகாக்கப்படும்.
-அமைச்சர் செங்கோட்டையன்.