விஷால் இயக்கத்தில் த்ரிஷா; மீண்டும் இணையும் ஜோடி

விஷால் த்ரிஷா சமர், சமர் விஷால், படம் இயக்கும் விஷால், விஷால் படத்தில் த்ரிஷா, விலங்குகள் படம் விஷால் சண்டக்கோழி-2 படத்தை முடித்துவிட்டு தற்போது தெலுங்கு டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் விஷால். இதற்கு அயோக்யா என்று பெயரிட்டுள்ளனர். சினிமா படம் இயக்கவே இந்த துறைக்கு வந்தார் விஷால். ஆனால் நடிப்பு, தயாரிப்பு, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி என பயணிக்க ஆரம்பித்தார். தற்போது 25 படங்களை முடித்துவிட்டு முதன்முறையாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். இவர் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் மீது தீராத அன்பு கொண்டதல் முதல் படத்திலேயே விலங்குகளை வைத்து படத்தை இயக்கவுள்ளார். இவரைப் போலவே விலங்குகள் மீது அன்பை பொழியும் திரிஷாவை இதில் இயக்கவுள்ளார். இதற்கு முன்பே சமர் என்ற படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் த்ரிஷா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். தற்போது இவர்கள் மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *