சினிமா சர்காரையே நிர்வகிக்க தெரியல; இதுல… விஜய் மீது தமிழிசை கடும் தாக்கு

அட்லியின் இயக்கம், விஜய்யின் நடிப்பு, ரஹ்மானின் பாடல் என பல காரணங்களால் மெர்சல் வெற்றிப் பெற்றது என்றாலும், அது மிகப்பெரிய வெற்றி பெற காரணம் பாஜக. வின் எதிர்ப்பு அலைதான் என்று சொன்னால் அது மிகையல்ல.

மெர்சலை தொடர்ந்து தற்போது நாளை வெளியாகவுள்ள சர்கார் படம் குறித்தும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

கதையை திருடி, கருத்தை திருடி கள்ள ஓட்டு பற்றி படமெடுத்து இருக்கிறார்கள்.

முத ல்வராகும் கனவில் சினிமாவில் நடிப்பவர்கள் திரையில் வேண்டுமானால் ஆட்சி நடத்தலாம்.  அதில் வேண்டுமானால் முதல்வராக நடிக்கலாம்.

சர்கார் என்று பெயர் வைத்துக்கொண்டு, சினிமா சர்காரையே சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள், உண்மையான சர்காரை எப்படி நிர்வகிப்பார்கள்? என சர்கார் படத்திற்கு தன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

Leave a Reply

Your email address will not be published.

two × three =