யுடர்ன் திரை விமர்சனம்

யுடர்ன் விமர்சனம்

நடிகர்கள் : சமந்தா, ஆதி, நரேன், பூமிகா, ஆடுகளம் நரேன்

இயக்குனர் – பவன் குமார்

இசை –  பூர்ணசந்திரா தேஜஸ்வி

ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி

கதை என்ன..?

சமந்தா ஒரு பத்திரிகையாளர். அவர் ஒரு சிறப்பு செய்தியை எழுத நினைக்கிறார். அதன்படி ஒரு நேரத்திற்காக காத்திருக்கிறார்.

சென்னையிலுள்ள வேளச்சேரி மேம்பாலத்தில்  செல்லும் ட்வீலர் நபர்கள் நடுவில் இருக்கும் கற்களை அகற்றிவிட்டு ரோட்டில் போட்டு விட்டு யூடர்ன் போட்டு செல்கிறார்கள். இதனால் அடிக்கடி அங்கு விபத்து நடக்கிறது.

இதை பார்க்கும் யுடர்ன் போடும் வண்டிகளின் நம்பர்களை குறித்து வைத்து அவர்களிடம் பேட்டி காண செல்கிறார்.

ஆனால் அதற்குள் சிலர் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள்.

இதற்கான காரணத்தை அறிய முடியாமல் காவல்துறையும் இந்த வழக்கை மூடி மறைக்கிறது.

ஆனால் இதை கண்டு பிடித்தாக வேண்டும் என சமந்தாவே ஒரு நாள் யுடர்ன் போடுகிறார்.

அவருடன் உயிர் பிழைத்தாரா? அங்கே யுடர்ன் போடுவதால் என்ன பிரச்சினை? எப்படி உயிர் இழந்தார்கள்? அதற்கு காரணம் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடித்தவர்கள் எப்படி..?

முதலில் இப்படத்திற்கான தனது முடியை வெட்டி இந்த கேரக்டருக்காக தன்னை மாற்றிக் கொண்ட சமந்தாவுக்கு சபாஷ் சொல்ல வேண்டும்.

யுடர்ன் போடும் நபர்கள் எப்படி மரணமடைகிறார்கள்? என்பதை அறியாமல் சமந்தா குழம்பும்போது நமக்கே குழப்பம் அடைகிறது.

அப்பாவியாக அருமையான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருடன் போலீஸ் அதிகாரியாக ஆதி. நல்ல மிடுக்கான நடிப்பு.

ஆடுகளம் நரேன் கடுப்பான போலீசாக நடித்துள்ளார். எப்போதும் சில போலீஸ் அதிகாரிகளை போல கடு கடுப்புடனே இருக்கிறார்.

பூமிகா மற்றும் மலையாள நடிகர் நரேன் இருவரும் கண்வன் மனைவியாக வருகிறார்கள். இவர்களுக்கான காட்சி குறைவு என்றாலும் இவர்கள்தான் படத்தின் உயிர்நாடி.

தொழில்நுட்ப கலைஞர்களின் பணி எப்படி..?

படத்தில் பாடல்கள் இல்லை. இதுபோன்ற விறுவிறுப்பான ட்விஸ்ட் உள்ள படத்திற்கு பாடல் இல்லாமல் இருந்துவிட்டதே சிறப்பு. பின்னனி இசைசிறப்பாக வந்துள்ளது.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து படத்தின் இடைவேளை வரை பரபரப்பாக செல்கிறது படம்.

ஆனால் 2ஆம் பாதியில் சற்று திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

யுடர்ன் போடும் அந்த இடம், ஆதி நிற்கும் அந்த மேம்பாலம், என அனைத்தையும் அருமையாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

யுடர்ன் போடலாம். ஆனால் சாலை விதிகளை மதிக்காமல் கற்களை போட்டு செல்வதால் எத்தனை உயிர் இழப்பு ஏற்படுகிறது என்பதைற்கு இந்த யுடர்ன் ஒரு சான்று.

படம் முடியும் போது அந்த யுடர்ன் இடத்திற்கு சிமெண்ட் போட் அந்த குறுக்கு பாதையை மூடுவது போல செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இது நிஜக்கதை என்பது போல் காட்டியிருக்கிறார் டைரக்டர். அதனால் ஓகே என விட்டுவிடலாம்.

யு டர்ன் – யுடர்ன் ஓடும் தியேட்டர்களுக்கு யுடர்ன் அடிக்கலாம்

 

Leave a Reply

Your email address will not be published.

three × 1 =