FANTASTIC FORENSIC… V1 Murder Case விமர்சனம் 3.75/5

புதுமுக நடிகர் ராம் அருண் கேஸ்ட்ரோ ஹீரோவாக நடித்துள்ளார்.

கதை என்ன?

‘V1’ என்றவுடன் விவகாரமாக எதையும் யோசிக்காதீர்கள். 7ஜி ரெயின்போ காலனி போல இது வி1 என்பது ஒரு வீட்டின் எண் ஆகும்.

அந்த வீட்டில் லிஜேஷும், காயத்ரியும் லிவிங் டூ கெதர் முறையில் வசிக்கிறார்கள்.

கணவன் மனைவி என்றாலே சண்டைகள் வரும். இந்த உறவில் வராதா? அதுபோல் அதற்கேற்ப நிறைய பிரச்சினைகள் ஏற்படுகிறது.

உன்ன கொல்லாம விட மாட்டேன் என காயத்ரியிடம் கோபத்தில் பேசுகிறார் லிஜேஷ்.

அன்றைய தினம் இரவே மர்ம நபர் ஒருவரால் காயத்ரி கொல்லப்படுகிறார்.

அந்த சமயத்தில் பெய்த மழையால் கொலை குற்றவாளியின் தடயங்கள் எல்லாம் அழிந்து போகிறது.

இதனை விசாரிக்க தடயவியல் (FORENSIC) துறை போலீஸ் அதிகாரியான ராம் அருண் கேஸ்ட்ரோ மற்றொரு அதிகாரியான விஷ்னுப்ரியாவுடன் வருகிறார்.

கொலையாளியை எப்படி கண்டு பிடித்தார்கள்? கொலைக்கான காரணம்? யார்? ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.

நடிச்சவங்க எப்படி..?

தடயவியல் துறை போலீஸ் துறையில் ஒரு பிரிவு. அதில் போலீஸ் யூனிபார்ம் இல்லை என்பதால் ஹீரோ அண்ட் ஹீரோயின் கலர் கலர் உடைகளில் வருகிறார்கள். அனைத்தும் அசத்தல்.

ஹீரோ ராம் அருண் கேஸ்ட்ரோ. அவரின் கேரக்டரை அலட்டிக்கொள்ளாமல் செம அசால்லட்டாக செய்துள்ளார்.

ஆனால் இவருக்கு இருட்டு என்றால் பயம் என்பதால் விசாரணைகளை பகலில் நடத்துவது தனிக்கதை.

அழகான கண்கள்… கம்பீரமான நடை என அசத்தியிருக்கிறார் நாயகி விஷ்னுபிரியா பிள்ளை.

காயத்ரியின் மற்றும் அவரின் லிவிங் டுகெதர் காதலன் லிஜேஷ் இருவரும் நல்ல தேர்வு.

காயத்ரியை காதலிக்கும் லிங்கா, காயத்ரியின் பெற்றோர், போலீஸ் அதிகாரிகள் டீம் என அனைவரும் நல்ல தேர்வு. அந்த FORENSIC OFFICE அழகாக உள்ளது.

டெக்னீசியன்கள்..

கிருஷ்ணசங்கர் டி.எஸ் அவர்களின் ஒளிப்பதிவும் ரோனி ரெபேலின் பின்னணி இசையும் கதையை தாங்கி நிற்கிறது. அதுபோல் அதுபோல் சி.எஸ்.பிரேம்குமாரின் எடிட்டிங் பணிகள் கச்சிதம். படத்தை 2 மணி நேரத்துக்குள் முடித்துவிட்டார்.

படம் முழுவதும் யார் கொலையாளி என நம்மை திணற வைத்துள்ளார். கொலையாளி இவரா? அவரா? என ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்துள்ளார்.

இவையில்லாமல் காலக்கட்டத்தில் நடக்கும் ஆவண கொலைகளை சாடியிருக்கிறார் இயக்குனர் பாவெல் நவகீதன்.
இவர் தான் இயக்குனர். நிறைய படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ளார்.

வெறும் க்ரைம் த்ரில்லராக இல்லாமல் சமூக விழிப்புணர்வை சொன்னதற்காக அவரை நிச்சயம் பாராட்டலாம்.

V1 Murder case review rating

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *