சிம்புவுடன் வட சென்னையில் நடிக்கும் அளவுக்கு பெருந்தன்மை இல்லை.. : தனுஷ்

தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான ‘பொல்லாதவன்’ பட மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.
அதன் பின்னர் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’ மற்றும் ‘வடசென்னை’ என 4 படங்களை மட்டுமே இதுவரை இயக்கியுள்ளார்.
இதில் வட சென்னை படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்கவிருந்தார்.
தற்போது தனுஷ் தயாரித்து நடித்துள்ளார்.
வருகிற 17-ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘வடசென்னை’ படம், மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது.
இதில், முதல் பாகம் மட்டும்தான் தற்போது ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.
அப்போது தனுஷ் பேசும்போது…
இப் படக்கதையை வெற்றிமாறன் 10 வருடத்திற்கு முன்பே சொல்லிட்டார்.
பின்னர் சிம்புவை வைத்து இப்படத்தை டைரக்ட் பண்ண போறேன் சொன்னார். நானும் சரி என்றேன்.
இப்போது வடசென்னையில் அமீர் நடித்திருக்கும் கேரக்டரில் என்னை நடிக்குமாறு கேட்டார்.
நான் பெருந்தன்மையானவன் தான். ஆனால் அவ்வளவு அந்த அளவுக்கு இல்லை.
பின்னர் என்னையே நாயகனாக நடிக்க கேட்டார். நானும் ஓகே சொல்லிட்டேன்  ” என்றார் தனுஷ்.

Leave a Reply

Your email address will not be published.

ten + 7 =