வடசென்னை திரை விமர்சனம்

நடிகர்கள்:  தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, ராதாரவி, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி,கிஷோர், பவன் மற்றும் பலர்.
இயக்கம் – வெற்றிமாறன்

இசை  – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
எடிட்டர் – வெங்கடேஷ் மற்றும் ராமர்
தயாரிப்பு – தனுஷ்

கதை என்ன..?

தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து பழகிப்போன கேங்ஸ்ட்டர் கதை தான்.

ஒரு கோஷ்டி இருக்கும். அதில் இருக்கும் தலைவனை போட்டுத் தள்ளிவிட்டு மற்றொருவன் வருவான். பின்னர் அதிலிருந்து ஒருவன் வருவான். கோஷ்டிகள் சண்டை போடும். இறுதியாக ஒருவன் தலைமை தாங்குவான். இதுதானே கேங்ஸ்டர்களின் கதை. அதே தான் இதிலும்.

அவ்வளவுதானா.? என்றால்… இந்த கதையை ரசிக்கும்படி ஒவ்வொரு பிரேம் பை ஃபிரேம் ஆக கெட்ட வார்த்தைகளுடன் கொடுத்துள்ளார் டைரக்டர் வெற்றிமாறன்.

ஊர் தலைவன் அமீர். அவரைப் போட்டுத் தள்ளிவிட்டு கிஷோர் மற்றும் சமுத்திரக்கனி வருகின்றனர். பின்னர் இவர்களுக்குள் பிரிவு வருகிறது. இதில் சமுத்திரக்கனி செய்த உதவியால் அவருடன் இணைகிறார் தனுஷ்.

பின்னர் அவர் எப்படி ஒரு கேங்ஸ்டர் ஆகிறார் என்பதே மீதிக்கதை. (மீதிக்கதை வடசென்னை 2ஆம் பாகத்தில் சொல்லப்படும்)

கேரக்டர்கள் நடிப்பு எப்படி..?

பொதுவாக 35 வயது ஹீரோவை 15 வயது பையனாக காட்ட வேண்டுமென்றால் வேறு ஒரு பையனை நடிக்க் வைப்பார்கள். ஆனால் மீசை தாடியை சேவிங் செய்துவிட்டால் தனுஷ் அவர்களே இந்த கேரக்டருக்கு பொருந்தி விடுவார்.

நிறைய தாடி வைத்தால் அவரே 35 வயது வாலிபராக மாறிவிடுகிறார். இரண்டிலும் தன் மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார்.

இதில் ஆக்சனை விட ஐஸ்வர்யாவுடன் ரொமான்சில் பின்னி எடுத்துள்ளார்.

பத்மா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் பட்டைய கிளப்பியுள்ளார். ஆனாலும் இவரும் பச்சை பச்சையாக பேசுவதுதான் நெருடலாக உள்ளது.

அழகு, அமைதி என ஆண்ட்ரியா தன் நடிப்பில் அசத்தல். ஆனால் இவரும் கெட்ட வார்த்தைகளை பேசுமபோது வடசென்னை பெண்களே இப்படிதான் இருப்பார்களோ? என்ற எண்ணமே நமக்கு தோன்றுகிறது.

கேட்டால் இது ஏ சர்ட்டிபிகேட் படம் என்று காரணம் சொல்வார்கள். சரி நாம அடுத்த கேரக்டருக்கு வருவோம்.

மீனவ மக்களின் தலைவனாக அமீர். பேச்சிலும் நடையிலும் உடையிலும் நல்ல முதிர்ச்சி. இவருடன் கிஷோர், சமுத்திரக்கனி, பவன், பாவல், டேனியல் பாலாஜி, ராதாரவி ஆகியோரும் சிறப்பான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்களின் பணி எப்படி..?

கோவிந்தமாள் பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் படத்தின் காட்சிகளுடன் கரைந்து போகிறது. பின்னணி இசையில் நம்மை அதிகமாகவே சந்தோஷப்படுத்தியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.

ஜெயில் காட்சிகள் செட் போன்றே தெரியவில்லை. அந்தளவுக்கு அருமையாக வடிவமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர்.

படத்தில் ஏகப்பட்ட அசிங்கமான கெட்ட வார்த்தைகள் வருவதால் முக சுழித்துக் கொண்ட பார்க்க நேரிடும். வடசென்னையில் நல்லவர்களே கிடையாதா? என்ற கேள்வியும் எழுகிறது.

மற்றபடி வட சென்னை பகுதிக்குள் நம்மை அழைத்து சென்று ஒவ்வொரு சதுர அடியாக நமக்கு கதை சொல்லியிருக்கிறார்.

வடசென்னை… கெட்ட வாடை சென்னை

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *