“வடசென்னை” படத்தை மனமார பாராட்டித் தள்ளிய கெளதம் மேனன்.!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘வடசென்னை’.
இதில் தனுஷுடன் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருந்தனர்.
இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படம் தொடர்பாக கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“வெற்றிமாறன், என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அற்புதமான இயக்கம், காட்சியமைப்பு. எழுத்து இயக்கம் என உங்கள் பெயர் வரும்போது ரசிகர்கள் கைதட்டும் சப்தத்தைக் கேட்பதை விட சிறந்த உணர்வு இல்லை.
தனுஷுக்கு எளிதாக வரும் ஒன்றில் அற்புதமாக செயல்படும்போது அவரைத் தாண்டி எங்கும் பார்க்க முடியவில்லை.
துணிச்சலாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா உயர்ந்து நிற்கிறார்.
அழகு, வசீகரம். வசவுச் சொற்கள் பேசும் இளம் பெண் கதாபாத்திரத்தில் நம்மை ஈர்த்து விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தன் மனதில் இருப்பதைப் பேசும், ஆண்களுக்கு வசவுச் சொற்களிலேயே பதில் சொல்லும் ஒரு பெண்ணைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது.”
இவ்வாறு கவுதம் மேனன் பதிவிட்டுள்ளார்.