வலிமை படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்

நடிகர் அஜித் நடிப்பில் எதிர்பார்ப்பிற்குரிய படமாக வலிமை உருவாகியுள்ளது.வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ஆம் தேதி இந்த படம் வெளிவர இருந்தது.ஆனால் கோரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் 50% இருக்கைகளோடு தான் இயங்குமென்று அறிவிப்பு வெளியானதையடுத்து வலிமை வருமா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.


இது குறித்துப் படக்குழுவினரிடம் இருந்து இது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை ஆனால் படம் சொன்ன தேதியில் வெளிவரும் என சிலத்தரப்பில் இருந்து தகவல் மட்டும் வெளியானது.
அதனையடுத்து படக்குழுவினர் தரப்பில் இருந்து தீடிரென வலிமை படம் தள்ளிப்போகிறது என அறிவிப்பு வெளியானது.மேலும் வலிமை படத்தில் இருந்து சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் என்னென்ன என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதன் படி வலிமை படத்தில் சில கெட்ட வார்த்தைகளையும் வன்முறை சம்பந்தப்பட்ட முக்கிய காட்சி ஒன்றையும் தணிக்கை குழு நீக்கியுள்ளார்களாம்.அது மட்டும் இல்லாமல் மிருகங்கள் வரும் காட்சிகளையும் போதை பொருள் பயன்படுத்தும் காட்சிகளையும் நீக்கியூள்ளார்களாம்.

வலிமை படத்தில் இடம்பெற்றிருந்த “கடவுள் தான் நிஜ சாத்தான்” என்ற வசனத்தையும் தனிக்கைக்குழு ம்யூட் செய்துள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

sixteen − fourteen =