வந்தா ராஜாவாதான் வருவேன்…; அஜித்துடன் மோத சிம்பு ஐடியா

பவன் கல்யாண், சமந்தா நடித்து தெலுங்கில் ஹிட்டான ‘அத்திரண்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தை லைகா நிறுவனம் தமிழில் ரீமேக் செய்து வருகிறது.

இப்படம் கன்னடம் மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது.

நான்கு நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தை சுந்தர் சி இயக்க சிம்பு நாயகனாக நடித்து வருகிறார்.

மகத், மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா ஆகியோர் நடிக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார்.

“வந்தா ராஜாவாதான் வருவேன்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தீபாவளியன்று வெளியிட்டனர்.

அடுத்த வருடம் 2019 பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட உள்ளதாக அதில் அறிவித்துள்ளனர்.

அதே நாளில் தான் அஜித் இரு வேடங்களில் நடித்துள்ள விஸ்வாசம் படமும் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இரு படங்களுக்கும் பலத்த மோதல் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

ten + 14 =