ரஜினியின் 2.0 உடன் இணையும் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன்

லைகா நிறுவனம் 600 கோடி ரூபாயில் தயாரித்துள்ள 2.0 திரைப்படம் வருகிற நவம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது.

இதே நிறுவனம்தான் தற்போது சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கி வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் 2.0 படம் வெளியாகும் அன்றே வந்தா ராஜாவாதான் வருவேன் பட ட்ரைலரை வெளியிட்டு அதை தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே டிரைலருக்கான டப்பிங் பணிகளை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ட்ரைலருக்காக சிம்பு பேசும் டப்பிங் புகைப்படங்களையும் படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

Vantha Rajava Than Varuven Trailer will be screened with 2pointO movie

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *