எதிர்மறையான வில்லன் எடி ப்ரோக்

வெனம் (Tamil)
(ஆங்கிலம் மற்றும் தமிழிலும்)

தயாரிப்பு – Sony Pictures நிறுவனம்
வெளியீடு – October 5

சூப்பர் ஹீரோக்களைப் போல அம்மாதிரியான விஞ்ஞான நவீனங்களில் உலா வரும் anti-சூப்பர்
ஹீரோக்களும் (எதிர்மறையான வில்லன் வேடம்!) இணையான மவுசு உண்டு. மார்வெல் (Marvel)
காமிக்ஸ் கதாபாத்திரமொன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது தான், எடி ப்ரோக்
என்கிற இப்படத்தின் பிரதான கதாபாத்திரம். சோனி மார்வெல் யூனிவர்சின் முதல் (Sony Marvel
Universe) படைப்பிது!

ஸ்பைடர்மேன் படத்தொடரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முக்கிய கதாபாத்திரம்தான், இந்த
எடி ப்ரோக்/வெனம் கதாபாத்திரம்!
அட்லாண்டா, நியூ யார்க், லாஸ் ஏஞ்சிலஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய ஊர்களில் இதன்
படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பைடர்மேன்-3 திரைப்படத்தில்தான், முதன்முதலாக எடி ப்ரோக்
கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

லைஃப் பெளண்டேஷன் நிறுவனத்தின் தலைமை பீடத்தில் வீற்றிருக்கும் சார்ல்டன் ட்ரேக் (ரிஸ்
அஹமத்), உயிரினங்களின் மீது விசித்திரமான ஆராய்ச்சி ரீதியிலான சோதனைகளைச்
(experiments) செய்து பார்ப்பதில் சமர்த்தர்!

எதிர்காலத்தில் மனித இனமே அழிந்துவிடும் ஒரு நிலை உருவாகுவதற்கான சாத்தியகூறுகள்
தென்பட, சிம்பியாட்ஸ் (Symbiotes) என்கிற ஒரு வகை இனம் துளிர் விடத் தயாராகிவிட்டதையும்
உணர்கிறார்! பத்திரிகையாளரான எடி ப்ரோக் (டாம் ஹார்டி), இவ்வாராய்ச்சியில் தன்னை
ஈடுபடுத்திக் கொள்கிறார்.

சிம்பியாட் ஒன்றோடு அவரது நெருக்கம், அவருக்குப் புதியதொரு சக்தியையும் அந்தஸ்தையும்
தந்தருள்கிறது!

நன்மைகளை விட, தீமைகள் அதிகமாக நடக்கவல்ல சூழ்நிலையும் உருவாகிறது! ஆனி வியாங்
(மிஷல் வில்லியம்ஸ்) எடியின் காதலியாகத் தோன்றுகிறார். லட்விக் கோரன்சன் இசையமைக்க,
மாத்யூ லிபாடிக்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆலம் பெளம்கார்டன் படத்தைத் தொகுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ‘வெனம்’ சங்கிலித் தொடர் படங்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது!

 

Leave a Reply

Your email address will not be published.

5 + 14 =