துப்பாக்கி 2 படத்திற்காக மீண்டும் விஜய்யுடன் இணையும் முருகதாஸ்
விஜய் நடித்த சர்கார் படத்தை முடித்துவிட்டு விரைவில் ரஜினி படத்தை இயக்கவுள்ளார் ஏஆர். முருகதாஸ்.
அந்த படத்தை லைகா தயாரிக்கவுள்ளது என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் ரஜினி படத்தை முடித்துவிட்டு 4வது முறையாக விஜய்யுடன் இணையவிருக்கிறாராம் முருகதாஸ்.
அது துப்பாக்கி படத்தின் 2ஆம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கண்டிப்பாக விஜய்யை வைத்து துப்பாக்கி-2 படத்தை இயக்குவேன் என்று தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார் முருகதாஸ்.