2019 ஜனவரியில் தொடங்கும் விஜய்-அட்லியின் 3வது படம்

மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஆனால் மெர்சல் படத்திற்கு பிறகு அட்லி எந்த படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில் தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரு வெற்றிப் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய்யை இயக்கவுள்ளார் அட்லி என சொல்லப்படுகிறது.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதன் சூட்டிங்கை 2019ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளாராம் அட்லி.

இதில் மெர்சல் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் ஒப்பந்தம் செய்ய உள்ளாராம் அட்லி.

இப்படத்திற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்று தலைப்பிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

3 × 3 =