ரஜினிக்கு அடுத்து விஜய்தான்
ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, ராதாரவி, பழ. கருப்பையா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சர்கார்.
ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இப்படத்தின் தயாரிப்பாளரும், சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதிமாறன் பேசியதாவது…
“மிகப்பெரிய நடிகர் வெளியில் சென்றால் அவருடன் 20 பேராவது செல்வார்கள். பத்திரிகையாளர்கள், 10 கேமராக்கள் அவருடன் செல்வார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார் விஜய் என்ற செய்தி அவரது ரசிகர்கள் இணையங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன்.
சினிமா உலகில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு விஜய் தான் மிகவும் எளிமையானவர். அவர் திரைத்துறையில் பல சாதனைகளைப் படைத்துவிட்டார்.
அவர் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. (சில நிமிடங்கள் அமைதியாக நின்றார்.) நீங்கள் நினைப்பது போல் அல்ல. ரஜினிகாந்த் போல் விஜய்யும் 3 டி தொழில்நுட்ப படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். ” என்று பேசினார் கலாநிதிமாறன்.