ரஜினி அறிவுரையால் பட தயாரிப்பைக் கைவிட்ட விஜய்சேதுபதி!

ரஜினி அறிவுரையால் படத்தயாரிப்பை கைவிட்ட விஜய்சேதுபதி.?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தார்.

இப்பட சூட்டிங் சமயத்தில் விஜய்சேதுபதிக்கு சில அறிவுரை சொன்னாராம் ரஜினிகாந்த்.

”நல்லா நடிக்கிறீங்க.; நல்ல மார்க்கெட் இருக்கும் போது நிறைய படங்கள் நடிங்க. இப்போ தான் நடிக்க முடியும்.

படங்கள் எல்லாம் அப்புறமா தயாரிக்கலாம்” என்று கூறினாராம் ரஜினி.

‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘ஜூங்கா’ ஆகிய படங்களைத் தயாரித்திருந்தார் விஜய்சேதுபதி.

மேலும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள ஒரு படத்தை விஜய்சேதுபதி தயாரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் ரஜினி அறிவுரையால் அப்பட தயாரிப்பை கைவிட்டு விட்டாராம் இந்த பேட்ட வில்லன் ஜித்து.

 

Leave a Reply

Your email address will not be published.

20 − six =