கஜா புயல் பாதிப்பு..:விஜய்சேதுபதி 25 லட்சம்; சிவகார்த்திகேயன் 20 லட்சம் நிதி

சில தினங்களுக்கு முன் தமிழகத்தின் பல மாவட்டங்களை தாக்கியது கஜா புயல்.

நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியது.

இதனால் மக்கள் வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

4 நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. சாலையெங்கும் மரங்கள் வீழ்ந்து கிடப்பதால் மின் கம்பிகளும் அறுந்துள்ளன.

இதனால் மின்சாரமும் இல்லாமல் தவித்து வருகின்றன. நிறைய ஆடு, மாடுகளும் இறந்து கிடப்பதால் தொற்று நோய் வருமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

தமிழக அரசுடன் இணைந்து சமூக ஆர்வலர்கள் நிவாரணப்பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளார். இவரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கி இருக்கிறார்.

மேலும் மற்றொரு 10 லட்சத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் 20 லட்சம் நிவாரண நிதியாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.

seventeen − nine =