செத்தும் கொடுத்தான் சீதக்காதி..; விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு அதிர்ச்சி க்ளைமாக்ஸ்
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி வித்தியாசமான கேரக்டரில் உருவாகியுள்ள படம் சீதக்காதி.
இது விஜய்சேதுபதியின் 25-வது படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஜய்சேதுபதி 80 வயதுடைய அய்யா வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார்.
மேலும் காயத்ரி, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் இன்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஐய்யா மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமொழியை தான் மையக்கருவாக வைத்திருக்கிறார்களாம்.
க்ளைமாக்ஸில் சீதக்காதி தற்கொலை செய்து கொள்வது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.