கமல், விஷாலை தொடர்ந்து விஜய்சேதுபதியும் டிவி. தொகுப்பாளரானார்
டிவியில் பிரபலமானால் சினிமாவில் வாய்ப்பு தேடி செல்வார்கள். ஆனால் தற்போது சினிமாவில் பிரபலமான கலைஞர்கள் டிவி நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அங்கு தொகுப்பாளர்களாக மாறி வருகிறார்கள்.
இதனால் டிவி நடிகர்கள் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அது வேற ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் விஷயத்துக்கு வருவோம்.
உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அதுபோல் நடிகர்கள் விஷால், பிரசன்னா, நடிகைகள் வரலட்சுமி, ஸ்ருதிஹாசன், ஆகியோரும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
தற்போது இந்த விஜய்சேதுபதியும் வருகிறார்.
விரைவில் சன் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
அந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் அவர் ஹீரோவின் ப்ரெண்டாக இருந்து வாழ்க்கையில் நிஜ ஹீரோக்களை சந்தித்து அவர்களை மக்களிடம் அறிமுகம் செய்கிறாராம்.