96’ திரைப்பட ரிலீஸ் விவகாரத்தில் உதவிய விஷால்

விஜய் சேதுபதி, த்ரிஷா  நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது.

இந்நிலையில்,தயாரிப்பாளர் திரு.நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது .

அந்தத் தொகையை  தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட  ரிலீஸின்போது திரும்ப தறுவதாக கூறியதால் நேற்று  பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்த தொகையை தருவதாக கூறியபிறகு பிரச்னை தீர்ந்து ‘96’ படம் ரிலீஸானது.

இது தொடர்பாக தற்போது விஷால் தரப்பில் விசாரித்தபோது,

திரு. விஷால் அவர்கள் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை தர வேண்டாம். அதுக்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார்.

திரு.நந்தகோபால் அவருக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷால் அவர்கள் , திரு.நந்தகோபால் அவரிடமே பெற்றுக்கொள்கிறார்.  அதுவரைக்கும் அந்த தொகைக்கு விஷால் அவர்கள் வட்டியும் கட்டுவார். ஆகவே,  பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை திரு. விஜய் சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் அவர்கள் நினைக்கிறார்.

மேலும், இந்த பிரச்சினையிலிருந்து விஜய்சேதுபதி அவர்கள் எந்த வலியும் இல்லாமல் வெளியே  வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு விஷால் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *