மாமனிதன் படத்திற்காக மாணிக் பாட்ஷாவாக மாறும் விஜய்சேதுபதி
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் ‘தர்மதுரை’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘மாமனிதன்’ என்ற படத்திற்காக விஜய்சேதுபதியை இயக்கவுள்ளார் சீனுராமசாமி.
இதன் சூட்டிங்கை ஆண்டிபட்டியில் தொடங்கியிருக்கிறார் சீனுராமசாமி.
‘ஜோக்கர்’ பட புகழ் குரு சோமசுந்தரமும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
யுவன்சங்கர் ராஜா இசையமைத்து இப்படத்தை தயாரிக்கிறார்.
யுவனுடன் அவரது தந்தை இசைஞானி இளையராஜவும் இணைந்து இசையமைக்கிறார்.
விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகி காயத்ரியும் இதில் நடிக்கிறார். அவர் டைப் ரைட்டிங் சொல்லி கொடுக்கும் டீச்சராக நடிக்கிறாராம்.
ஆட்டோ ஓட்டும் டிரைவர் வேடத்தில் ஹிந்துவாக விஜய்சேதுபதியும் அவரின் முஸ்லீம் நண்பராக குரு சோமசுந்தரமும்நடிக்கிறார்.
பாட்ஷா படத்தில் மாணிக்கம் என்ற கேரக்டரில் ஆட்டோ டிவைராக நடித்திருந்தார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ப்ளாஷ்பேக்கில் முஸ்லீம் நண்பராக சரண்ராஜ் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
எனவே இந்த படத்தில் பாட்ஷா டச் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.