தன்னுடன் மோதும் தனுஷ்-சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து சொன்ன விஜய்சேதுபதி
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் சீதக்காதி படம் வருகிற டிசம்பர் 20-ந்தேதி வெளியாகிறது.
இது அவரது 25வது படமாக உருவாகியுள்ளது.
இதற்கு அடுத்த நாள் 21-ந்தேதி மாரி-2, அடங்கமறு, கனா, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் வெளியாகிறது.
இது பற்றி விஜய்சேதுபதி கூறுகையில்…
எனது சீதக்காதி படம் வெற்றி பெற வேண்டும். என் படத்தை போல தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி ஆகியோரின் படங்களும் வெற்றிபெற வேண்டும்.
யாரும் தோற்றுப்போக வேண்டும் என்று படங்கள் தயாரிப்பதில்லை. அனைவருமே வெற்றி பெற வேண்டும். அதற்காக நான் வாழ்த்துகிறேன்” என்றார் விஜய் சேதுபதி.