தனுஷ் உடன் மோதும் விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி இருக்கிறது.
`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன்,பாரதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
விஜய்சேதுபதி இதில் பல வேஷங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது. விதவிதமான கெட்டப் அப்புகளில் அவருடைய போஸ்டர்கள் வருகின்றன.
96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இசையமைக்க, சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் தான் (டிசம்பர் 21ல்) தனுஷ் நடித்துள்ள மாரி 2 மற்றும் விஷ்னு விஷால் நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.