80 நாடுகளில் 1200 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் ‘சர்கார்’

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, முருகதாஸ் இயக்கம், விஜய் நடிப்பு ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

வருகிற நவம்பர் 6ஆம் தீபாவளிக்கு உலகமெங்கும் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

போலந்து, மெக்சிகோ, நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் இப்படம் வெளியாகவுள்ளதால் இதன் வியாபாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது சுமார் 80 நாடுகளில் 1200 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் வியாபாரம் மட்டும் ரூ. 200 கோடியை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

two × four =