இந்தாண்டும் மோதலுக்கு தயாரான சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி
விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘96’.
`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் நாளை ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 13ம் தேதி ரிலீஸாகிறது.
அதே தினத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ திரைப்படமும் வெளியாகிறது.
பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா நாயகியாக நடித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ & விஜய்சேதுபதி நடித்த ‘ரெக்க’ ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் மோதியது கவனிக்கத்தக்கது.