கமல்-விக்ரம் இணையும் கடாரம் கொண்டான் பர்ஸ்ட் லுக் வெளியானது

சாமி 2 படத்தை தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடித்து வருகிறார் விக்ரம்.

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

இதில் விக்ரம் உடன் கமலின் 2வது மகள் அக்‌ஷராஹாசன் நடிக்க, தூங்காவனம் பட இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு கடாரம் கொண்டான் என்று தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் அஜித்தின் விஸ்வாசம் ஸ்டைலில் நரைத்த தாடி மீசையுடன் காணப்படுகிறார் சீயான் விக்ரம்.

Leave a Reply

Your email address will not be published.

14 − 5 =