“ விண்வெளிப் பயணக் குறிப்புகள்;”-ஜுலை மாதத்தில் திரைக்கு வரவுள்ளது.

இலெமூரியன் திரைக்களம் சார்பில் ; தயாராகிவரும் திரைப்படம் “ விண்வெளிப் பயணக் குறிப்புகள்;”

ஒரு சிறுநகரத்தில் அரசியல் பின்புலத்தோடு அதிகாரம் செலுத்திவரும் படிப்பறிவற்ற கதைநாயகன். அறிவை வளர்த்துக் கொள்வதற்காக அவன் செய்யும் முயற்சிகளால் பல இன்னல்களுக்கு ஆளாகி வரும் நகர மக்கள் அவனுடைய கோமாளித்தனங்களுக்கு முடிவு கட்ட திட்டமிடும் போது, தனது விண்வெளி சுற்றுலா பயணத் திட்டத்தை அறிவிக்கிறான் கதைநாயகன்.

கதைநாயகனுக்கு எப்படி விண்வெளிப்பயணம் செல்லும் ஆசை வந்தது? தனது குறிக்கோளில் அவன் எப்படி வெற்றியடைந்தான்? அவனை தடுக்க நகர மக்கள் செய்த முயற்சிகள் என்ன? இவற்றையெல்லாம் சுவாரசியமான, அவல நகைச்சுவையாக (பிளாக் காமெடி) சொல்லியிருக்கும் படைப்பே “ விண்வெளிப்
பயணக் குறிப்புகள் ;”

இத்திரைப்படத்தில் கதைநாயகனாக அத்விக் ஜலந்தர் அறிமுகமாகிறார். இவர் இலண்டன்  ; பெட்ஃபோர்ட ; யுனிவர்சிட்டியில் மாஸ் கம்யூனிகேஷன் பயின்றவர்.மேலும் பாலுமகேந்திரா சினிமா பட்டறையில்நடிப்புக்கலைபயின்றவர். மேலும் நவீன நாடகக் கலைஞர்களான பூஜா இராமகிருணன்,
கோபாலகிருஷ்ணன், தற்காப்புக்கலை வீரர் ஜோகிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கணேஷ் ராகவேந்திரா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைகழகத ;தில் நாட்டுப்புற கலைகள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வியல் பற்றி ஆய்வு செய்து வரும் பறையிசைக் கலைஞர் சே.தமிழ் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் அடர்ந்த வனப்பகுதிகளிலும், மதுரை மற்றும் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளிலும் இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ஜெயபிரகாஷ் மேலும் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பையும் அவரே மேற்கொண்டுள்ளார்.

இலெமூரியன் திரைக்களம் சார்பில் ; யாழ்மொழி ரா பாபுசங்கர் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

ஜுலை மாதத்தில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *