அயோக்யா போஸ்டரில் பீர் பாட்டில்; கண்டித்த ராமதாசுக்கு விஷால் விளக்கம்

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயோக்யா.

 

தன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர்.

 

இதில் போலீஸ் ஜீப்பில் அருகே பீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு நிற்பார் விஷால்.

 

இதை கண்டிக்கும் வகையில் என்னவொரு சமூக பொறுப்பு? என விஷாலை விமர்சித்து இருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

 

தற்போது இந்த கண்டனத்திற்குவிஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

 

நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேன். ஆனால் குடிக்கவில்லை. கையில் வைத்திருந்தால் அது குடிப்பது என்பது ஆகாது.

 

இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன்.  ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது.

 

அதை வைத்து ஒரு சண்டைக் காட்சியும் உள்ளது. அந்த காட்சியைத்தான் அப்படி வைத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார் விஷால்.

Leave a Reply

Your email address will not be published.

9 + ten =