தயாரிப்பாளர் சங்க நன்மைக்காக விஷால் பதவி விலக சிவா வலியுறுத்தல்

நடிகர் தயாரிப்பாளர் என வலம் வரும் விஷால் விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இவர்  நடிகர் சங்கத்தின் பொறுப்பாளராகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் டி சிவா வலியுறுத்தியுள்ளர்.

அவர் கூறியதாவது…

தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாக சீர்கேடு உள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தை கெடுக்கும் எண்ணம் விஷாலுக்கு இல்லை.

ஆனால் அவரால் தயாரிப்பாளர் சங்கப் பணிகளை சரியாக கவனிக்க முடியவில்லை. அவர் நடிகர் சங்கத்திலும் பொறுப்பாளராக இருந்து கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கும்போது, இரு நிர்வாகத்தையும் சிறப்பாக கொண்டு செல்ல முடியவில்லை.

எனவே தயாரிப்பாளர் சங்கத்தின் தன்னுடைய பதவியை விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்.” என சிவா கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.

twenty + 6 =