வெறும் ரூ.5.44 கோடி தான விஸ்வரூபம் 2

பொதுவாகவே கமல் படங்கள் என்றால் ஒரு சர்ச்சை இருக்கும். தற்போது அது விஸ்வரூபம் 2 படத்திற்கும் எழுந்துள்ளது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2  படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகிறது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை பிரபல பிரமீட் சாய் மீரா நிறுவனம் தொடுத்துள்ளது.

இதுதொடர்பான மனுவில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாவது…

மர்மயோகி படத்தில் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த படத்தை கமல் உருவாக்கவில்லை. மேலும் வாங்கிய சம்பளத்தையும் கமல் திருப்பித் தரவில்லை.

எனவே வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கமல் திருப்பி தர வேண்டும், அதுவரை விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீசில் பிரச்சினை இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *