அஜித்தின் டபுள் கெட்டப் அப்பில் “விஸ்வாசம்” பட பர்ஸ்ட் லுக்
அஜித்தின் டபுள் கெட்டப் அப்பில் “விஸ்வாசம்” பட பர்ஸ்ட் லுக்
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம்.
சத்யஜோதி தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.
இதில் அஜித்துடன் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த ஆண்டு 2019 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.40 மணிக்கு இதன் பர்ஸ்ட்டை வெளியிட்டுள்ளனர்.
அதில் அஜித் இரண்டு கெட்டப்பில் உள்ளார். ஒரு வேடம் வயதான வேடம். நரைத்த தலை, நரைத்த தாடி. மற்றொரு கெட்டப்பில் இளமையாக இருக்கிறார். கருப்பு முடி தாடியுடன் உள்ளார்.
இரண்டிலும் மீசையை முறுக்கியப்படி போஸ் கொடுத்துள்ளார் தல.